பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

திருப்புவனம்:  திருப்புவனம் அருகே பஸ் வசதி கேட்டு புல்வாய்க்கரை ரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் அருகே தவத்தாரேந்தலில் சுமா 300 குடும்பங்கள் உள்ளன. இங்கு வழக்கமாக காலை 5 மணிக்கும், 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும், இரவு 8 மணிக்கும் வந்த பஸ்கள் கடந்த மூன்று வருடங்களாக நின்று விட்டன. தவத்தாரேந்தலில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க திருப்புவனம் தான் வர வேண்டும். பஸ் இல்லை என்பதால் கருவக்குடிக்கு 4 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் பஸ் ஏற வேண்டும். எனவே காலை 8 மணிக்கு பஸ் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் பஸ் இயக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை கருவக்குடிக்கும், மேலராங்கியம் விலக்கு ரோட்டுக்கும் அருகே மெயின் ரோட்டில் தவத்தாரேந்தல் மாணவர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 1 மணிநேரம் நடந்தது. பள்ளிக்கு மாணவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது….

The post பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: