பழவேற்காட்டில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி: போலீசார் ஏற்பாடு

பொன்னேரி: பழவேற்காட்டில் குழந்தைகள் பாலியல் விழிப்புணர்வு சட்டம் மற்றும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை திருப்பாலைவனம் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமை வகித்தார். இதில் போலீசார் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்பிரமணிய அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மத்தியில் கல்வி கற்பதன் நோக்கம், ஒழுங்கு மற்றும் ஒழுக்க முறைகளை கடைப்பிடித்தல், குழந்தைகள் பாலியல் விழிப்புணர்வு சட்டம் மற்றும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு திட்டம் சார்ந்த தகவல்கள் மேலும் சாலை விதிகளை மதித்தல், விபத்து ஏற்படுவதை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளை அறிவுரைகளாக வழங்கினர்….

The post பழவேற்காட்டில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி: போலீசார் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: