அவிநாசி, ஆக.3: அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் பள்ளித் தலைமை ஆசிரியர் புனிதவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ் நாட்டில் தொடக்கப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளிகள் வரையுள்ள, 37000 பள்ளிகளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. 2009 ம் ஆண்டு இந்தியா முழுவதும் கல்வி உரிமைச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதில் ஒரு அம்சம் தான் பள்ளி மேலாண்மைக் குழுவாகும். பள்ளி மேலாண்மைக்குழுவென்பது, அரசு பள்ளிகளை மேம்படுத்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மறு கட்டமைக்க முடிவு செய்து, இதற்கான நடை முறையை தமிழக அரசு அறிவித்து விட்டது.
இதன்படி, நேற்று தமிழ் நாடு முழுவதும் முதற்கட்டமாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் படி, அவிநாசி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் புனிதவதி கூட்டத்துக்கு தலைமை தாங்கி, பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார். விழுதுகள் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் மறு கட்டமைப்பு பள்ளி மேலாண்மை குழு பார்வையாளராக இருந்து கண்காணித்தார். முடிவில் அமுதா நன்றி கூறினார்.
The post பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.