பல கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு வக்பு வாரிய நிலம் மீட்பு

சென்னை: தமிழ்நாடு  வக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வரானதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு நிலங்களை மீட்க முழு கவனம் செலுத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கடந்தாண்டு எனது தலைமையில் புதிதாக வக்பு வாரியம் அமைக்கப்பட்டதும் வக்பு சொத்துகளை விற்பனை செய்து விடாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பட்டியல் அளிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் பேகம்பூர் மஸ்ஜிதுக்கு சொந்தமான 65 ஏக்கர் நிலம், திருச்சி ஹஜரத் நபி ஸல் பாத்திஹா வக்புக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலம், தூத்துக்குடி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு பாத்தியப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான அரிசி ஆலை, விழுப்புரம் வளவனூரில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம், நாகூரில் ரூ.4 கோடி மதிப்பிலான தர்காவுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் கடந்தாண்டு மீட்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்காவில் புட்டி பேகம் சாகிபா சவுத்ரி வக்புக்கு சொந்தமான 31.61 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்தில் பதியப்பட்டுள்ளது. இதில் 17 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை விற்க முயன்ற போது ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நில மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post பல கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு வக்பு வாரிய நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: