பன்னாட்டு கருத்தரங்கம்

 

பழநி, ஜூலை 24: பழநி மின்வாரிய திடலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கிளைச்செயலாளர் பழனிக்குமார் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாணிக்கம், மோகனா, பால்ச்சாமி, பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி அய்யாவழி திருச்சபை பாலபிரஜாபதி அடிகள் தமிழரின் வழிபாட்டு நெறிகள் குறித்து பேசினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் வேலாயுதம் ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம்’ என்ற தலைப்பில் பேசினார். மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் கவிவாணன், மாநிலக்குழு உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட பொருளாளர் தாமோதரன் ஆகியோர் கருத்துரையாற்றினார். கிளை பொருளாளர் இளங்கோ நன்றி கூறினார். சாமரம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

The post பன்னாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: