பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர்களுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் முதன்மை பள்ளியில் பசுமைப்புரட்சி பாதுகாவலராக அறியப்படுபவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, காடுகளின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் துளசி கவுடா, புகழ்பெற்ற பாடகர் டாக்டர் காயத்திரி சங்கரன் மற்றும் இளம் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர் யோகதர்ஷினி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் எம்விஎம்.வேல்மோகன் தலைமை வகித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விருது பெற்றவர்களை முதன்மைக் கல்விப் பொறுப்பாளர் ஜெயந்தி ராஜகோபாலன், முதுநிலை முதல்வர் கே.எஸ். பொன்மதி ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இது சமூகத்திற்கும் தேசிய நலனுக்கும் ஒருவர் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து பல ஆயிரக்கணக்கான வேலம்மாள் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் ஊக்கம் அளிக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த விழாவானது உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்ற எண்ணத்தை ஒருமனதாக பிரதிபலிப்பதாகவும், பெண்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது….

The post பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர்களுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: