பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பண மோசடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 18 நாட்கள் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் போலீசார் எட்டு தனிப்படை அமைத்து  கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில்  கடந்த 5ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கியதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில்ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த ரிட் மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் வாதத்தில், ‘முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வரையில் நாங்கள் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யவில்லை. ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் தான் நாங்கள் அவரை கைது செய்தே ஆகவேண்டிய நிலை இருந்தது’ என குறிப்பிட்டார்.இதையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது உத்தரவில், ‘பண மோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது. இதையடுத்து அவர் வெளிநாடு எங்கும் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியூர்களுக்கு எங்கும் செல்லக் கூடாது. நீதித்துறைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். அதேப்போன்று தன்மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த ரிட் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுதொடர்பான வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தார்….

The post பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: