நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அறிக்கைகளில் கையெழுத்து, தேதி குறிப்பிடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அறிக்கைகளில் கையெழுத்து, தேதி குறிப்பிடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சேத்தூரைச் சேர்ந்த ராமசுப்பு பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தாசில்தார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், ‘‘தாசில்தார் தாக்கல் செய்த அறிக்கையில் தேதி குறிப்பிடவில்லையே? நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில் கையெழுத்துடன் தேதியும் இருக்க வேண்டும்.  அப்படி இல்லாத  அறிக்கையை ஏற்க முடியாது. இதுபோல் முறையற்ற வகைகளில் அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். தேதி, கையெழுத்து இல்லாத அறிக்கையை தாக்கல் செய்யும் அதிகாரி, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும். அன்று நாள் முழுவதும் நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றனர். பின்னர் மனுதாரர் கோரிக்கையின் மீது சம்பந்தப்பட்ட தாசில்தார் 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்….

The post நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அறிக்கைகளில் கையெழுத்து, தேதி குறிப்பிடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: