நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது

 

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சுற்றி வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு என மூன்று ஆறுகள் செல்கிறது. இந்த ஆறுகளில் இரு சக்கர வாகனங்களில் மணல் திருட்டு நடப்பதாக நீடாமங்கலம் போலீசாருக்கு,தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் இரவு பகல் பாராது ரோந்து பணியில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டையுடன் வேகமாக சென்ற நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் வலங்கேமான் போலீஸ் சரகம் கொட்டையூர் மேட்டு த் தெருவை சார்ந்த நீலகண்டன் (35) என்பதும், அவர் மூணாறு தலைப்பு வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இது தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீலகண்டனை கைது செய்து, மணல் மூட்டையுடன் வாகனத்தை பரிமுதல் செய்தனர்.

The post நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: