நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பு முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி:  நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 4வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் பாதிப்பை காட்டிலும் நேற்று  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை வரையிலான கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * 2527 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 4,30,54,952ஆக அதிகரித்துள்ளது. * கேரளாவில் தொற்று பாதித்த 31 பேர் மற்றும் டெல்லியில் 2 பேர் என மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். * நாடு முழுவதும் சிகிக்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,079ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்….

The post நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பு முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: