நாகப்பட்டினம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாகப்பட்டினம்,ஆக.23: சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க வேண்டி நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சிந்தாமணி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலாவை சுற்றி கொண்டு இருக்கிறது. இந்த விக்ரம் லேண்டர் நிலாவின் பாறைகள், கற்கள் போன்றவற்றை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தரையிறங்க இஸ்ரோ இடம் தேர்வு செய்தது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் தென்துருவத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் சந்திராயன் 3 சென்ற விக்ரம்லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என வேண்டி என்றும் தேசியமும் தெய்வீகமும் வழியில் என்ற அமைப்பின் சார்பில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சிந்தாமணி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதில் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: