நம்பிக்கையில்லா தீர்மானம் வரவிருந்த நிலையில் அதிமுக ஒன்றிய குழு தலைவர் திடீர் ராஜினாமா: ஆத்தூரில் பரபரப்பு

ஆத்தூர்: நம்பிக்கையில்லா தீர்மானம் வர இருந்த நிலையில், ஆத்தூர் அதிமுக ஒன்றியகுழு தலைவர், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லிங்கம்மாள் பழனிசாமி இருந்து வந்தார். இவர் மீது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், ஆர்டிஓ  சரண்யா ஆகியோருக்கு மனு அளித்திருந்தனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான சிறப்பு கூட்டம் ஆர்டிஓ சரண்யா தலைமையில் நடக்க இருந்தது. ஆனால், கூட்டம் திடீரென தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, ஒன்றிய குழு தலைவி லிங்கம்மாள், கலெக்டர் கார்மேகத்தை நேரில் சந்தித்து, உடல்நிலை சரியில்லாததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், நான் வகித்து வரும் ஒன்றிய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்….

The post நம்பிக்கையில்லா தீர்மானம் வரவிருந்த நிலையில் அதிமுக ஒன்றிய குழு தலைவர் திடீர் ராஜினாமா: ஆத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: