நந்தா கல்லூரிகளில் வளாகத்தேர்வு

ஈரோடு, மே 14: ஈரோடு நந்தா என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகளின் சார்பில் இறுதி ஆண்டு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு என மும்பையை தலைமையிடமாக கொண்டு தகவல் தொழில் நுட்பத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் டாடா கன்ஸ்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமானது தனது வளாகத்தேர்வை நடத்தியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நந்தாஅறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் முதன்மைக்கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

டாடா கன்ஸ்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மனித வள மேலாளர் விக்னேஷ் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து வளாகத்தேர்வை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நேர்காணலில் கலந்துகொண்டனர். இதில் நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் என்.ரெங்கராஜன், தொழில்நுட்டகல்லூரிமுதல்வர்ச.நந்தகோபால், நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் மற்றும் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கோவை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post நந்தா கல்லூரிகளில் வளாகத்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: