தொழில் முனைவோருக்கு உகந்த மாவட்டம் கோவை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

கோவை: தொழில் முனைவோர்களுக்கு ‘‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது வழங்கும் விழா கோவை யில் நேற்று நடந்தது.  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை  விருந்தினராக கலந்து கொண்டு 44 நிறுவனங்களுக்கு  விருதுகளை வழங்கி  பேசியதாவது:கடந்த 2021 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு  என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய  விவகாரங்களை தவிர தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு தேவையானதை  தொலை நோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது.  கோவை ஸ்டார்ட் அப் துறையில்  முன்னோடியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு உகந்த  மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவையும் வளரும் என்ற நம்பிக்கை  எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post தொழில் முனைவோருக்கு உகந்த மாவட்டம் கோவை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: