தேனியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

 

தேனி, டிச. 31: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநிலம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, தேனி வருவாய்த் துறை முயற்சியின் காரணமாக, தேனி மேனகாமில்ஸ், பிரிக்ஸ் ஒர்க்ஸ், டிடிகே மைன்ஸ், கிரசர் மற்றும் ஜல்லி சங்கத்தினர், பட்டாசு உரிமையாளர் சங்கத்தினர் சேர்ந்து ரூ.20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை வழங்கினர்.

இதில் 5கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை, அரை கிலோ ரவை, அரை கிலோ சேமியா, 100 கிராம் டீத்தூள், 1 கிலோ சர்க்கரை உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் அடங்கிய ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஷஜீவனா லாரிகள் மூலமாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முரளி, வருவாய் ஆய்வாளர் சையது காதர் உசேன்,தேனி விஏஓ ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.

The post தேனியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: