பெரம்பலூர், ஏப்.7: தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி யில் பெரம்பலூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் 2வது முறையாக முதலிடம் மற்றும் 2 இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் சமீபத் தில் நடந்த மாநில அளவி லான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் ப்ரீ ஸ்டைல், பட்டர் பிளை, பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் நான்கும் கலந்த 200மீ நீச்சல் போட்டிகளில் பெரம் பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளை யாட்டு வீரர்-வீராங்கனை களான மேலப்புலியூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன், புது அம்மாபாளையம் ரம்யா, மங்கலமேடு அம்பிகாபதி, ஆதனூரைச்சேர்ந்த ஜீவா, ஆகிய 4 பேரும் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்றனர்.
இவர்களில் கலைச்செல் வன், ஜீவா, அம்பிகாபதி ஆகிய 3 பேரும் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலிய ரில் கடந்த மாதம் 29ம்தேதி தொடங்கி 31ம்தேதி வரை இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் நடைபெற்ற தேசியஅளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தப் போட் டிகளில் கலைச்செல்வன் 200மீ தொடர் நீச்சல்போட்டி யில் தேசியஅளவில் 2வது இடமும், வீரர் ஜீவா 50மீ ப்ரீ ஸ்டைல் பிரிவில் தேசிய அளவில் முதலிடத்தையும், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தேசிய அளவில் 2வது இடத் தையும் வென்றார்.
அம் பிகா நீச்சல்போட்டியில் 50மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தேசியஅளவில் முதல்இடத் தையும், 100மீ நீச்சல் போட் டியில் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தேசிய அளவில் 2வது இடத்தையும் வென்றார். தேசிய அளவில் சாதனை புரிந்த கலைச்செல்வன், ஜீவா, அம்பிகாபதி, ஆகிய 3 பேரையும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலு வலர் சிவா, மாவட்ட மாற்று த்திறனாளி நல அலுவலர் பொம்மி ஆகியோர் வாழ்த்தினர்.
The post தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி வீரர், வீராங்கனைகள் 3 பேர் சாதனை appeared first on Dinakaran.