தேங்காய்க்கு உரிய விலை கோரி: விவசாயிகள் போராட்டம்

 

பல்லடம்,ஜூலை7: பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நேற்று முன்தினம் தொடங்கி 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாய விலைப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.பாலுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.உயர்மின் கோபுர திட்டத்தில் விவசாயிகளுக்கு மாத வாடகை வழங்க வேண்டும்.அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி, விற்க அனுமதி அளிக்க வேண்டும்.

தேங்காய்,கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து மானிய விலையில் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் அரசு கொள்முதல் ஆதார விலையை உயர்த்த வேண்டும். சமையலில் தேங்காய் எண்ணொய் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஏந்திவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் பல்லடம், காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.

The post தேங்காய்க்கு உரிய விலை கோரி: விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: