தென்காசி ஆனைப்பாலம் சிற்றாற்றில் மஹா ஆரத்தி

தென்காசி: குற்றாலத்தில் முதன்முறையாக அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் மற்றும் கடையநல்லூர் முண்டகக்கன்னி அம்மன் அறக்கட்டளை சாா்பில் ஆரத்தி விழாவின் நிறைவு நாளான நேற்று தென்காசி ஆனைப்பாலம் சிற்றாறு நதிக்கரையில் ஓம் நமசிவாயா என்ற கோஷம் விண்ணை முழங்க மஹா ஆரத்தி விழா நடந்தது. குற்றாலத்தில் சன்னியாசிகள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் மஹா ஆரத்தி விழா நடந்தது. விழாவில் முதல் நாளான 21ம் தேதி திருக்குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவில் எதிரே உள்ள சித்ரா நதிக்கும், இரண்டாவது நாளான நேற்று முன்தினம் புலியருவியில் மஹா ஆரத்தி நடந்தது. மூன்றாவது நாளாக நேற்று மாலை தென்காசி ஆனைப்பாலம் சிற்றாற்றில் மஹா ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் கே.ஆர். பங்களாவில் வைத்து மிருதயுஞ்சய ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, தம்பதிகள் பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு சன்னியாசிகள் சங்க தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் குமரகுருபர சுவாமி, தேவ பிரகாஷ், ஆனந்தா, விஸ்வநாதன், தொழிலதிபர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். சன்னியாசிகள் சங்க பொதுச் செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி, குற்றாலம் மௌன சாமி மடம் மூர்த்தி சுவாமி, ஈஸ்வரானந்தா சிவ பிரம்மானந்த சரஸ்வதி, பண்டாரம், உமா மகேஸ்வர சிவாச்சாரியா சுவாமிகள், சுத்த நித்தியானந்த சரஸ்வதி, காளீஸ்வரானந்தா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். மதன் சுப்பிரமணியன், பாலகன், ஆறுமுகசாமி, மகாராஜன், தயாசங்கர், சோலையப்பன், தமிழ்ச்செல்வன், குழந்தைவேலு, முருகன், போஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். இதில் ஏராளமான பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி நாகசங்கர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

The post தென்காசி ஆனைப்பாலம் சிற்றாற்றில் மஹா ஆரத்தி appeared first on Dinakaran.

Related Stories: