ராசிபுரம், அக். 1: ராசிபுரம் நகராட்சியில், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகரமன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை வகித்து துவங்கி வைத்தார். கமிஷனர் சேகர் முன்னிலை வகித்தார். முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ, கண், கர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், தொற்று நோய்களுக்கான பரிசோதனை, காசநோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே, தொழுநோய் கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு சேலம் மற்றும் கோவை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முகாமில் தூய்மை அலுவலர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் செல்வி மற்றும் மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ், கவின் குமார், மாதேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சிவகுமார், சரவணகுமார் பாலாமணி உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் என கலந்து கொண்டனர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.