திருவொற்றியூரில் புத்தக கண்காட்சி

திருவொற்றியூர்: 59வது தேசிய நூலக வார விழாவையொட்டி, திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், கிளை நூலக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதை திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர் தொடங்கி வைத்து, நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், அரசியல் போன்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, வாசகர் வட்ட தலைவர் என்.துரைராஜ், நிர்வாகிகள் கே.சுப்பிரமணி, மதியழகன், நூலகர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post திருவொற்றியூரில் புத்தக கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: