திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 8 வாக்கு எண்ணும் மையங்கள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்ட அறிக்கை: ஆவடி மாநகராட்சி – 1, நகராட்சிகள் – 6, பேரூராட்சிகள் – 8 ஆகியவற்றில் அடங்கிய மொத்தம் 318 வார்டுகள் உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சி ஆகியவை பட்டாபிராம் டிஆர்பிசிசிசி இந்து கல்லூரி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகியவை பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி நகராட்சி – திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரி, திருவள்ளூர் நகராட்சி –  திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி நகராட்சி – பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆரணி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி ஆகிய பேரூராட்சிகள் – பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பள்ளிப்பட்டு, பொதட்டூர் ஆகிய பேரூராட்சிகள் பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி – ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ள தொன்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.* 220 வாக்குச்சாவடி மையம் பதட்டமானவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 830 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 220 பதட்டமான வாக்குச்சாவடிகளில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பிரச்னைகள் உள்ளதாக அடையாளம் காணப்படும் இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. …

The post திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 8 வாக்கு எண்ணும் மையங்கள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: