ஒரு நபருக்கு எத்தனை மதுபான பாட்டில் விதிமுறைகள் உருவாக்க வலியுறுத்தி ஜூலை 16ம் தேதி ஆர்ப்பாட்டம்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஒரு நபருக்கு எத்தனை மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உருவாக்க வலியுறுத்தி ஜூலை 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) வெளியிட்ட அறிக்கை: ஒரு நபருக்கு எத்தனை மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். பல்க் ஆர்டர் பேரில் மதுபானங்கள் வாங்குவோர் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, குறிப்பிட்ட மதுக்கடையில் பெற்றுக் கொள்ள எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கும் முறை அறிமுகம் செய்ய வேண்டும்.

இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படும் போது டாஸ்மாக் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்டு இறுதி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஜூலை 16ம் தேதி காலை 11 மணிக்கு டாஸ்மாக் தலைமை நிர்வாக அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சென்று, முதல்வரிடம் முறையீடுகளை முன் வைப்பது என்று சங்கம் முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஒரு நபருக்கு எத்தனை மதுபான பாட்டில் விதிமுறைகள் உருவாக்க வலியுறுத்தி ஜூலை 16ம் தேதி ஆர்ப்பாட்டம்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: