திருப்போரூர் நான்கு மாடவீதிகளில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்போரூர்: திருப்போரூர் நான்கு மாடவீதிகளில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள நான்கு மாடவீதிகளில் சாலை மற்றும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. திருப்போரூர் நான்கு மாடவீதிகள், உள் மாடவீதி, குளக்கரை சாலை ஆகிய இடங்களில், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) லதா, திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல், திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், கூடுதல் வட்டாட்சியர் ஜீவிதா, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு நெருங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முடியாததால். நேற்று இப்பணி மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று கிழக்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

The post திருப்போரூர் நான்கு மாடவீதிகளில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: