திருச்செந்தூரில் பரபரப்பு: ரேஷன் அரிசி கடத்திய ஜீப் கவிழ்ந்தது: டிரைவர் தப்பியோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடத்தல் ரேஷன் அரிசியுடன் சென்ற ஜீப் கவிழ்ந்தது. அதிலிருந்து தலா 50 கிலோ கொண்ட 29 மூடைகளில் 1.45 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் தாலுகா எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் திருச்செந்தூர் – குலசேகரன்பட்டினம் ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். ஆலந்தூர் மெயின்ரோட்டிலிருந்து என்.முத்தையாபுரம் செல்லும் ரோட்டில் ரோந்து சென்ற போது அங்குள்ள திருப்பத்தில் ஒரு ஜீப் ஒன்று கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜீப் அருகே சென்று பார்த்த போது உள்ளே ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது. உடனே ஜேசிபி மூலம் ஜீப் மீட்கப்பட்டு திருச்செந்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஜீப்பை ஆய்வு செய்ததில் அதில் தலா 50 கிலோ கொண்ட 29 மூடைகளில் இருந்த 1450 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் அந்த மூடைகள் தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜீப்பின் பதிவு எண்ணை வைத்து ஜீப்பின் உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post திருச்செந்தூரில் பரபரப்பு: ரேஷன் அரிசி கடத்திய ஜீப் கவிழ்ந்தது: டிரைவர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: