திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எறையூர், தத்தனூர், மாத்தூர், குண்டுபெரும்பேடு, பேரீஞ்சம்பாக்கம், கடுவஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் போட்டியிடும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் எறையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர், சோகண்டி பால்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் எறையூர் பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் எறையூர் சசிரேகா சரவணன், தத்தனூர் புஷ்பா சின்னகண்னு, மாத்தூர் கோபி, குண்டுபெரும்பேடு மதியழகி இருசப்பன், பேரீஞ்சம்பாக்கம் கோவிந்தராஜ், கடுவஞ்சேரி விநாயகமூர்த்தி ஆகிய திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்….

The post திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: