தருமபுர ஆதீனத்தில் குருபூஜை விழா: நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தர் குருமூர்த்தங்களில் எழுந்தருளல்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் குருமூர்த்தங்களுக்கு எழுந்தருளி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த பழமையான தருமபுரம்ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. நேற்று 21ம் தேதி காலை கமலைஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது.ஆதின மரபு படி நேற்று தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ல மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆதீனத்தை நாற்காலி பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்யவதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சன்னிதானம் குருவாக பாவிப்பதால் நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு செய்வது மரபு என கூறப்படுகிறது, அதனடிப்படையில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார்….

The post தருமபுர ஆதீனத்தில் குருபூஜை விழா: நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தர் குருமூர்த்தங்களில் எழுந்தருளல் appeared first on Dinakaran.

Related Stories: