தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில்; தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் எஸ்பியாக சுந்தரவதனம், மதுரை எஸ்பியாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்பியாக பாஸ்கரன், திருவாரூர் எஸ்பியாக சுரேஷ்குமார், ராமநாதபுரம் எஸ்பியாக தங்கதுரை, திருவள்ளூர் எஸ்பியாக பி.சி.கல்யாண், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டலா ஐஜியாக தேன்மொழி, மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் நியமனம், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சைபர் கிரைம் துணை ஆணையர் பதவி மத்திய குற்றப்பிரிவில் உருவாக்கப்பட்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

The post தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: