தமிழகத்தை 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற முடிவு ண்டுக்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

திண்டுக்கல்: தமிழகத்தை 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பணிகள் மேற்கொண்டு வருகிறார் என திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். ண்டுக்கல்லில் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கம், சென்னை வேளாண் விளைபொருள் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வரவேற்றார். மாநில தலைவர் தினேஷ் சங்கர், முதன்மை துணை தலைவர் பாக்கியலட்சுமி, வேளாண் விளைபொருள் ஏற்றுமதி நிறுவன மண்டல பொறுப்பாளர் சோபனா குமார் வாழ்த்துரை வழங்கினர். கழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அம்பேத்கர் நூல்களை தமிழில் மொழி பெயர்க்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அம்பேத்கருக்கு திண்டுக்கல்லில் சிலை வைக்க கோரிக்கை விடுத்துள்ளீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும். கிராமப்புற, நகர்புறங்களில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகதை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பணிகள் மேற்கொண்டு வருகிறார். ருவாரூர் மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் ஆதிதிராவிடர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 80 ஆயிரம் பேர் குடிசைகளில் வாழ்ந்து வருகிறார்கள். நான் திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்பதால் அவர்களுக்கு வீடுகள் கட்டி தருவது குறித்து முதல்வர், வருவாய் துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். தாட்கோ மூலமாக அதிக கடன் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். தொழில் செய்ய முன்வருவோரை ஊக்குவிக்கப்படும். நல்ல அரசு இருந்தால் மாதம் மும்மாரி மழை பொழியும் என்பார்கள். திமுக அரசு அமைந்த பிறகு அடிக்கடி மழை பெய்கிறது. கோடை காலத்திலும் அணைகளில் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னை இல்லாமலும், விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தேவையான நீரும் கிடைத்து வருகிறது. ங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது. அனைவருக்கும் சம உரிமை வழங்கும் ன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி முதல்வர் ஆட்சி புரிந்து வருகிறார். தொழில் முனைவோர் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை இந்த அரசு நிறைவேற்றி தரும். இவ்வாறு பேசினார். ந்நிகழ்ச்சியில் துணை தலைவர் அரவிந்த் குமார் பால்ராஜ், திண்டுக்கல் லீட் பேங்க் மேலாளர் அருணாச்சலம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். னி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் சிறு தொழில் மைய இயக்குனர் ஜோசப் மார்டின் செய்திருந்தார்….

The post தமிழகத்தை 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற முடிவு ண்டுக்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: