தமிழகத்தில் புதிதாக 1,146 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 79,735 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 34 லட்சத்து 42 ஆயிரத்து 929 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 4,229 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 33 லட்சத்து 84 ஆயிரத்து 278 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,681 ஆக உள்ளது.மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 37,970 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிக பட்சமாக சென்னையில் 262, கோவை 188, செங்கல்பட்டு 102 என மூன்று மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்ைக நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது….

The post தமிழகத்தில் புதிதாக 1,146 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: