தண்டராம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: கன்றுக்குட்டியை கடித்துக் குதறியது

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் வேளாண்மை துறை அலுவலகம் எதிரே குழந்தைவேல் என்பவர் நிலத்தில் தனக்கு சொந்தமான மாடுகளைக் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மாடுகளை மேய்க்க ஓட்டி சென்று விட்டு கொட்டகையில் கட்டுவதற்காக வரும்போது. கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி மர்ம விலங்கு கடித்து இறந்து போய் கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் இடம் விசாரித்தபோது பக்கத்து நிலத்துக்காரர் சேக் உசேன் என்பவர் மனைவி ஜெய ராபி நிலத்தில் இருக்கும்போது நிலத்தின் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சென்றதாக கூறினாராம். உடனடியாக குழந்தைவேல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலை அறிந்த தாசில்தார் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்தன், சம்பத், முத்து, வனத்துறையினர் வனவர் சரவணன், குமார் உள்ளிட்டோர் கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதியை கால் தடங்களை பார்வையிட்டு எந்தப் பகுதியில் உள்ளது என்று அதை பிடிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்….

The post தண்டராம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: கன்றுக்குட்டியை கடித்துக் குதறியது appeared first on Dinakaran.

Related Stories: