உலகம் டெல்டா வகை கொரோனா: இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை Jun 29, 2021 இங்கிலாந்து ஹாங் காங் இங்கிலாந்து... தின மலர் இங்கிலாந்து: டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தலால் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. டெல்டா வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த L452R வைரஸ் பாதிப்பு, இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் மூலமாக ஹாங்காங்கிலும் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வர ஹாங்காங் தடை விதித்துள்ளது … The post டெல்டா வகை கொரோனா: இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை appeared first on Dinakaran.
தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு