சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதத்தில் 61.56 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 61,56,360 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3,01,15,886 பேர் பயணம் செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 56.66 லட்சம் பேரும், செப்டம்பர் மாதத்தில் 61.12 லட்சம் பேரும், அக்டோபர் மாதத்தில் 61.56 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். அதில் அதிகபட்சமாக அக்டோபர் 21ம் தேதி 2,65,683 பேர் பயணம் செய்துள்ளனர்.செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 43,454 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர். மேலும் அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,57,688 பயணிகள், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 36,33,056 பேர் பயணம் செய்துள்ளனர். அதேபோல் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு  20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில்  43,454 பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 21ம் தேதி மட்டும் 2,65,683 பேர் பயணம் செய்துள்ளனர்….

The post சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதத்தில் 61.56 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: