சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் கோயில் தேரோட்டம்!: மாதவா..கேசவா.. பக்தி முழுக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!!

சென்னை: சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் கோயில் சித்திரை திருவோண பெருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்று அழைக்கப்படும் பேயாழ்வார் பிறப்பிடமாக சென்னை மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோயில் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை திருவோண பெருவிழா 10 நாட்கள் விமர்சியாக நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு மாதவா..கேசவா..என பக்தி முழுக்கத்துடன் தேரை வடம் பிடித்து வழிபட்டனர். மாதவப்பெருமாள் கோயிலில் தொடங்கிய தேரோட்டம், முண்டகண்ணியம்மன் கோயில் தெரு, நாச்சியார் தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்தது. தேரோட்டத்தை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. …

The post சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் கோயில் தேரோட்டம்!: மாதவா..கேசவா.. பக்தி முழுக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: