சு.ஆடுதுறை கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

குன்னம், ஏப்.4: சு.ஆடுதுறை கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் சு.ஆடுதுறை கிராமத்தில் அவைத்தலைவர் கருணாநிதி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து முதல் உறுப்பினராக ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவரை சேர்த்து பணியை துவக்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் குன்னம் ராசேந்திரன், தொகுதி பொறுப்பாளர் ஆனந்தகுமார், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாநில துணை செயலாளர் சன்.சம்பத், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், பால் பண்ணை சக்திவேல், விவசாய அணி புகழேந்தி, இளைஞர் அணி அமைப்பாளர் விக்னேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கவியரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

The post சு.ஆடுதுறை கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: