சுயநிதி, நிதியுதவி பள்ளிகளில் ஆங்கிலவழி பாடப்பிரிவு தொடங்க அனுமதிக்க உத்தரவு

சென்னை: சுயநிதி பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு தொடங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு தொடங்க அனுமதி கேட்கும் கருத்துருக்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் பெறப்பட்டு உரிய அனுமதியை தொடக்க கல்வித்துறை வழங்கி வருகிறது.இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை எண் 101ன் படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வி  ஆணையரின் செயல்முறைகளில் சுயநிதி, நிதியுதவி பெறும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் 6, 10ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு தொடங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் நிலையிலேயே வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மேற்கண்ட பள்ளிகளில்  1 முதல் 8ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு தொடங்க அனுமதி கோரும் போது, அதன் தன்மை கருதி 50 பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஆங்கில வழிப் பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கலாம் என தொடக்க கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே அனுமதி வழங்குவார்கள்….

The post சுயநிதி, நிதியுதவி பள்ளிகளில் ஆங்கிலவழி பாடப்பிரிவு தொடங்க அனுமதிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: