சும்மா… செல்லமா தட்டினாரு மாமா…: பாஜ எம்எல்ஏ சமாளிப்பு

உன்னாவ்: உத்தர பிரதேசத்தில் பாஜ எம்எல்ஏ.வை நிகழ்ச்சி நடக்கும் மேடையில் விவசாயி ஒருவர் அடிக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு வரும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இங்கு கடந்த 5ம் தேதி நடந்த சிலை திறப்பு விழாவில் சதார் தொகுதி பாஜ எம்எல்ஏ பங்கஜ் குப்தா பங்கேற்றார். அப்போது, வயதான விவசாயி ஒருவர் மேடையேறி வந்து அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் குறித்து பங்கஜ் குப்தா நேற்று கூறுகையில், “வீடியோவில் வருபவர் எனது மாமா. அவர் எப்போதும் போல், கன்னத்தில் செல்லமாக தட்டினார்…’’ என்றார். அவரை அடித்த விவசாயி சத்தர்பால், ‘‘மேடையில் குப்தா அலட்சியமாக அமர்ந்திருந்ததால், மூத்தவர் என்ற முறையில் அன்பாக அடித்தேன்,’ என்றார். ‘இந்த சமாளிப்பு நல்லாதான் இருக்கு…’ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்….

The post சும்மா… செல்லமா தட்டினாரு மாமா…: பாஜ எம்எல்ஏ சமாளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: