சுதர்சன் கல்வி குழுமத்தில் மக்கள் தொகை தினம் அனுசரிப்பு

 

புதுக்கோட்டை, ஜூலை 13: சுதர்சன் பொறியியல் கல்லூரி மற்றும் சுதர்சன் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி, போஸ்டர் மற்றும் ஃப்ளாஷ் மாப் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவை கல்லூரி முதல்வர் னிவாசன் தொடங்கி வைத்தார். இதில் சுதர்சன் பொறியியல் கல்லூரி மற்றும் சுதர்சன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மனித சங்கிலியாக இந்திய வரைபடத்தை உருவாக்கினர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா செய்திருந்தார். விழாவை சுதர்சன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கலியபெருமாள் சேது ராமலிங்கம் நன்றி கூறினார்.

The post சுதர்சன் கல்வி குழுமத்தில் மக்கள் தொகை தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: