பெரம்பலூர்,நவ.28: பெரம்பலூர் அருகே வாலி கண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை 2வது சோம வாரத்தையொட்டி 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கிபி 9ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் நேற்று (27ம்தேதி) கார்த்திகை மாதத்தின் 2வது சோம வாரத்தை (திங்கள் கிழமை) முன்னிட்டு, 108 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. சோமவார யாக பூஜையை தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திர வியங்களால் வாலீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகங் கள் நடந்தப் பட்டது. பூஜைகளை கோவில் குருக்கள்கள் ஜெயச்சந் திரன், குமார், செல்லப்பா ஆகியோர் முன்னின்று நடத்தினர். பூஜைகளில் வாலிகண்டபுரம், மேட்டுப் பாளையம், சாத்தனவாடி, பிரம்மதேசம், தேவையூர், தம்பை,வல்லாபுரம், சாலை, பெரம்பலூர், அ.குடிக்காடு, அனுக்கூர் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
The post சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க ஆலோசனை கார்த்திகை 2வது சோமவார விழா வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம் appeared first on Dinakaran.