சிறந்த படம் பசங்க..சிறந்த நடிகர் கரண்..!: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. 4ம் தேதி மாலை சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. விருத்தாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுபரிவு வழங்கப்பட உள்ளது. 2009 முதல் 2014 வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் பரிசு ரூ.1 லட்சம், 3ம் பரிசு ரூ.75,000; சிறந்த படம் சிறப்பு பரிசு ரூ.75,000 என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 2009ல் இருந்து 2014 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தமிழ்நாடு அரசு 2017ல் அறிவித்தது. 2009ல் சிறந்த படத்துக்கான முதல் பரிசு – பசங்க, 2ம் பரிசு மாயாண்டி குடும்பத்தார், 3ம் பரிசு – அச்சமுண்டு அச்சமுண்டு, 2009ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது மலையன் படத்தில் நடித்த கரணுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post சிறந்த படம் பசங்க..சிறந்த நடிகர் கரண்..!: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: