சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

மதுரை: சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அவர், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மதுரை வரும் ஓபிஎஸ்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது. அதிமுக தொண்டர்கள் எப்போதும் சாதி, மதம், பார்ப்பதில்லை, மதச்சார்பற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும். அதிமுக தொண்டர்களை பிரித்து தேசிய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று யாரவது நினைத்தால் அது நடக்காது. அதிமுக விழாது; புத்துணர்ச்சியோடு மீண்டு வரும். அதிமுக மக்கள் இயக்கமாகும்; அதிமுக தொண்டர்களின் இயக்கமாகும். அதிமுக லட்சியத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. யார் நினைத்தாலும் அதிமுகவை பிரிக்கவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது எனவும் கூறினார். …

The post சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: