கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

கோவில்பட்டி  சட்டமன்ற தொகுதியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன்  போட்டியிடுவது ஏன்  என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஜெயலலிதா  மறைவுக்கு பின்னர் 2018ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  டிடிவி தினகரன்  போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றார். வரும்  சட்டமன்ற தேர்தலில் அவர் கோவில்பட்டி தொகுதியில்  போட்டியிடுவதாக  அறிவித்துள்ளார். முதலில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்  போட்டியிடுவதாக  கூறிய டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதற்கு  தொகுதி  சீரமைப்பில் நாயக்கர் சமுதாய ஓட்டுக்கள் குறைந்து, தேவர் சமுதாய  ஓட்டுக்கள்  வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்வது காரணம் என்று கூறுகின்றனர்.  தேவர்  சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள கயத்தாறு ஒன்றியம் மற்றும்  சுற்றுப்புற  கிராமங்கள், முன்பு ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்தது.தூத்துக்குடி  மாவட்டத்தில் சாத்தான்குளம் தொகுதியை ரத்து செய்து அதிலிருந்த  பகுதிகளை  ஓட்டப்பிடாரம் மற்றும் வைகுண்டம் தொகுதியில் சேர்த்ததால்,   ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்த கயத்தாறு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள்   கோவில்பட்டி தொகுதியில் சேர்ந்து விட்டன. இதனால் நாயக்கர்கள்   பெரும்பான்மையாக இருந்த கோவில்பட்டி தொகுதி தற்போது தேவர் சமுதாயத்தினர்   பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியாக மாறிவிட்டது. ஏற்கனவே  ஆண்டிபட்டியில் போட்டியிடுவேன் என்று கூறிய  டிடிவி தினகரன், அங்கு ஓபிஎஸ்,  தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரது  எதிர்ப்புகளுக்கு மத்தியில் கரை சேருவது  கடினம் என்று கணித்தே,  கோவில்பட்டியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.  மேலும் கோவில்பட்டி தொகுதி  சிறிய தொகுதி என்பதால் மாநிலம் முழுவதும்  பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும்  என்ற எண்ணமும் டிடிவி தினகரனுக்கு  உள்ளது. இதற்கிடையே அதிமுக  கூட்டணியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3ம்  முறையாக களம் இறங்குகிறார். திமுக  கூட்டணியில் கோவில்பட்டி தொகுதி  மார்க்சிஸ்ட் கட்சிக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. …

The post கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி ஏன்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: