கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி வகுப்பு துவக்கம்

சென்னை: கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், தமிழகத்தில் இன்றுமுதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் துவங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு எடுத்த நடவடிக்கை காரணமாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதையடுத்து முதல்வர் தலைமையில், கடந்த 6ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டது. முக கவசம், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது உள்ளிட்ட காரணிகள் கட்டாயமாக்கப்பட்டு மருத்துவ கல்லூரிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.இதன்படி இன்றுமுதல் தமிழகத்தில் 25 அரசு மருத்துவ கல்லூரிகள், 15 பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் என 60 மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய நிலையில் தற்போது மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. …

The post கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி வகுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: