கொரோனாவுக்கு குணமடைவோர் அதிகரிப்பு: 97.57 சதவீதம் பேர் பிழைத்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால். 2ம் அலை முடிவுக்கு வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த புள்ளி விபரத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:* கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. * புதிதாக 403 நோயாளிகள் பலியாகி உள்ளனர்.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்றரை லட்சமாக குறைந்துள்ளது. இது, கடந்த 152 நாட்களில் பதிவாகி உள்ள  குறைவான எண்ணிக்கையாகும். * தினசரி தொற்று விகிதம் 1.95 சதவீதமாக உள்ளது. * குணமடைவோர் எண்ணிக்கை 97.57 சதவீதமாக உள்ளது. இது, கடந்தாண்டு மார்ச்சில் இருந்து பதிவான எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகும்.* தொற்று எண்ணிக்கை குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனால். 2ம் அலை முடிவுக்கு வருவதாக தோன்றுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்….

The post கொரோனாவுக்கு குணமடைவோர் அதிகரிப்பு: 97.57 சதவீதம் பேர் பிழைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: