குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலையால் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  மையம் உருவாகியுள்ளது. அது புயலாக உருவாகி, அந்தமான், நிக்கோபார் பகுதிகளை தாக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்தமான், நிக்கோபார் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நேற்று (19ம் தேதி) முதல் வரும் 22ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. எனவே அந்தமான், நிக்கோபார் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்களில் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சென்னையிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு சென்றுவிட்டு அவதிப்படக்கூடாது என்பதற்காக சென்னை விமான நிலைய அதிகாரிகள் புயல் எச்சரிக்கை காரணமாக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது பற்றி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதோடு சுற்றுலாவுக்காக அந்தமான் செல்லும் பயணிகள் தங்களுடைய பயணங்களை வரும் 22ம் தேதி வரை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் விமான நிறுவனங்கள் டிக்கெட்கள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு செல்போனில் புயல் எச்சரிக்கை பற்றிய குறுந்தகவலையும் அனுப்பியுள்ளன. …

The post குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலையால் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: