குடியாத்தம் அருகே 3 இடங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வனவிலங்குகளின் தாகம் தீர்க்க 3 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய வனச்சரகமான இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான், குரங்கு, காட்டு நாய் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.மேலும், ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது. அங்குள்ள யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச்சரகத்திற்குள் வருகின்றன. இந்நிலையில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே குடியாத்தம் வனப்பகுதியில் இருந்து  தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் கிராமங்களை முற்றுகையிடும் போக்கு  அதிகரித்து வருகிறது. இரவு நேரம் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் தண்ணீர்  தேடி மலையோர கிராமங்களுக்குள் வனவிலங்குகள் நுழைகின்றன.இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் வனப்பகுதியில் தண்ணீர் ெதாட்டியை திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதன்படி, வனவிலங்குகளின் தாகம் தணிக்க குடியாத்தம் வனத்துறையினர் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். குடியாத்தம் அடுத்த அனுப்பு, பரதராமி, கல்லப்பாடி ஆகிய இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 நாட்களுக்கு ஒருமுறை டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தொட்டிகளில் நிரப்ப  உள்ளனர்….

The post குடியாத்தம் அருகே 3 இடங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி appeared first on Dinakaran.

Related Stories: