கிறிஸ்தவ திருமண சான்று பெற சென்னை வர வேண்டியதில்லை

* மண்டல டிஐஜிக்களுக்கு திருமண பதிவு அதிகாரம்* தமிழக அரசு அதிரடி உத்தரவுசென்னை: பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணை:கிறிஸ்தவ திருமணபதிவு சான்று நகல்களை பெறுவதற்காக தமிழகம் முழுவதில் இருந்து தலைநகரான சென்னைக்கு பொதுமக்கள் வரவேண்டிய நிலை தவிர்க்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் திருமண சான்று கோரும் மனுக்கள் அதிகளவில் உள்ளதால், திருமண சான்றின் நகலை பெறுவதற்கு தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது, எனவே சம்பந்தப்பட்ட மக்களுக்கு அதிக பொருட்செலவு மற்றும்  நேர விரயம் ஏற்படுகிறது. இந்த கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, இந்திய கிறிஸ்தவ திருமண  சான்று வழங்குவதற்காக டிஐஜி நிலையில் உள்ள பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளருக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை இணைய வழியிலான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திற்கான நகல்களை பொறுத்தமட்டில் அந்தெந்த பதிவு மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு பரவலாக்கி, அந்தெந்த பதிவு மண்டலங்களில் கோரப்படும் இந்திய கிறிஸ்தவ திருமண உண்மை சான்றுகளை அந்தெந்த மண்டல டிஐஜிக்களே வழங்கலாம் எனவும், புதிதாக மண்டலம் உருவாக்கப்படும் நேர்வில் அந்தெந்த மண்டல டிஐஜிக்களுக்கும் இதே அதிகாரம் வழங்கலாம். …

The post கிறிஸ்தவ திருமண சான்று பெற சென்னை வர வேண்டியதில்லை appeared first on Dinakaran.

Related Stories: