வதோதரா ஏர்போர்ட் விரைவில் சூரிய மின்சக்தியில் இயங்கும்

வதோதரா: குஜராத்தில் உள்ள வதோதரா விமான நிலையத்தில் விரைவில் சூரிய மின்சக்தியில் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வதோதரா விமான நிலைய இயக்குனர் சரண் சிங் கூறியதாவது: விமான நிலைய வளாகத்தில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து விரைவில் மின்உற்பத்தி தொடங்க உள்ளது. சுமார் 675கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் மாதந்தோறும் ஏற்படும் ரூ.5லட்சம் மின்கட்டணம் தவிர்க்கப்படும். இவ்வாறு கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: