காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

 

பந்தலூர், ஜூலை 6: பந்தலூர் அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆல் தி சில்ரன் அமைப்பு மூலம் நேற்று பந்தலூர் அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் முஹம்மத் யாசிர் தலைமை வகித்து பேசினார்.

நிகழ்வில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவ சுப்ரமணியம், காசநோய் தடுப்பு பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் விஜய குமார், மோனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் அனைவரையும் வரவேற்று பேசினார். காச நோயாலிகளுக்கு பச்சை பயிர், கம்பு, பொட்டு கடலை, நில கடலை, பேரீச்சம்பழம், உலர்திராட்சை, பாதம், தட்டபயிர் மற்றும் கொண்டை கடலை அடங்கிய ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காந்தி சேவை மையம் தலைவர் நௌஸாத், ஏகம் பவுண்டேசன் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: