கனமழை பெய்து வரும் நிலையில் உதவி தேவைப்படுவோர் காவல்துறையை அணுகலாம்

 

ஊட்டி, ஆக. 3: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்த நிலச்சரிவுகள் மூலம் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களை கருத்தில் கொண்டு நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களை கண்டறியவும், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தால், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுபாட்டு அறை மற்றும் தனிப்பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் பேரிடர் மீட்பு கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தந்து விவரங்களை பதிவு செய்யலாம்.

பொதுமக்கள் தகவல் கொடுக்கும் எந்த நேரத்திலும் உதவி செய்ய ஏதுவாக காவல்துறை சார்பில் ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் மொத்தம் 10 குழுக்கள் தயராக உள்ளனர். மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் செயல்படும் காவல் கட்டுபாட்டு அறை எண் 0423-2444111, தனிப்பிரிவு அலுவலகம் – 9498101260, 9789800100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ெதரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை பெய்து வரும் நிலையில் உதவி தேவைப்படுவோர் காவல்துறையை அணுகலாம் appeared first on Dinakaran.

Related Stories: