தங்காடு-எடக்காடு சாலையில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

 

ஊட்டி, ஜூலை 31: ஊட்டியில் இருந்து தங்காடு வழியாக எடக்காடு செல்லும் சாலையில் பல இடங்களில் சாலையில் மரக்கிளைகள் தொங்கிக்கொண்டிருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் இருந்து காத்தாடிமட்டம், தங்காடு வழியாக எடக்காடு செல்லும் முக்கிய வழித்தடம் உள்ளது. இவ்வழித்தடத்தில் ஊட்டியில் இருந்து எடக்காடு, முள்ளிகூர், கீழ்குந்தா போன்ற பகுதிகளுக்கு நாள் தோறும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன.

மேலும், தனியார் வாகனங்கள் அதிகளவு செல்கிறது. குறிப்பாக, தேயிலை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளும் அதிகளவு இவ்வழித்தடத்தில் செல்கின்றன. இந்நிலையில், இச்சாலையில் தங்காடு அருகேயுள்ள ெமாரக்குட்டி முதல் எடக்காடு செல்லும் சாலையில் பிகிலி பள்ளம் பகுதியில் ஏராளமான சீகை மரங்கள் சாய்ந்துள்ளன.

பெரும்பாலான மரங்களின் கிளைகள் சாலையில் தொங்கி கொண்டிருக்கின்றன. இவ்வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் மற்றும் தேயிலை ஏற்றிச்செல்லும் லாரிகள் இந்த மரக்கிளைகளில் மோதியபடியே செல்கின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தங்காடு முதல் எடக்காடு வரையில் பிகிலி பள்ளம் பகுதியில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். என வாகன ஒட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தங்காடு-எடக்காடு சாலையில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: